மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

9o
9o

எரிபொருள் இருந்த நிலையில் அமைச்சின் அனுமதியின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

அதற்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் குழு ஒன்று நியமிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அழுத்கமகே தெரிவித்துள்ளார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கேரவலபிட்டிய வெஸ்ட்கோஸ்ட் ஆலையில் 1500 டன் எரிபொருள் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இது வேண்டும் என்றே செய்த சூழ்ச்சியா என ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி நாட்டின் பல பிரதேசங்களில் மின்சார தடை ஏற்பட்டது. இது சட்டவிராதமான செயல் என அறிவிக்கப்பட்டது.