வீட்டுக்கு வெளியே எவரும் வராதீர்கள் – மக்களுக்கு அரசு எச்சரிக்கை

4 rr 2
4 rr 2

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலத்தில் வௌியே செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பொலிஸாரும் முப்படையினரும் ஊரடங்குச் சட்ட விதிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளனர் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நாட்டில் பாரிய சுகாதார சவால் நிலவுவதாலேயே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கான செயற்பாடுகளில் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணி செயற்பட்டு வருகின்றது.

அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள் மாத்திரமே இந்தக் காலப்பகுதியில் பயணிக்க முடியும்” – என்றுள்ளது.