வவுனியா மக்களுக்கு வைத்தியர்களால் அவசர அறிவிப்பு!

dengue 1
dengue 1

வவுனியாவில் 24 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிமனையின் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயின் தாக்கம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் டெங்கு தொற்று அதிகரித்துள்ளதால் இங்கு 24 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 103 இடங்களில் நுளம்பு பெருகக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்
மக்களும் இதற்க்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் மற்றும் தலைவலி காணப்பட்டால் வைத்தியசாலையை நாடி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு வவுனியா மக்களுக்கு வைத்தியர்கள் அவசர அறிவிப்பு விடுத்துள்ளனர். அத்துடன் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.