இந்தியாவின் செயற்கைக் கோள் இன்று விண்ணுக்கு

4 fd
4 fd

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ரொக்கெட் ஒன்றை இன்று (11) மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூமியை கண்காணிக்கும் இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த  மூன்று செயற்கைகோள்களும், அமெரிக்காவின் 6 செயற்கைகோள்களும் வணிக ரீதியில் இந்த ரொக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.

பி.எஸ்.எல்.வி. சி-48 ரொக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.