12 வருடங்களுக்குரிய பேப்பர்களை “கொள்வனவு” செய்த பெண்!

16 c
16 c

நாடு முழுவதும் மக்கள் டாய்லெட் பேப்பர் கொள்முதலில் முண்டியடித்துக்கொண்டிருக்கும் நிலையில் குயின்ஸ்லாந்தை சேர்ந்த பெண்ணொருவர் இணையத்தில் டாய்லெட் பேப்பர் வாங்கியபோது இடம்பெற்ற தவறு காரணமாக 48 பெட்டிகளில் டாய்லெட் பேப்பர் சுருள்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. தனக்கு விநியோகிக்கப்பட்டுள்ள இந்த சுருள்கள் அடுத்த 12 வருடங்களுக்கு போதுமானவை என்று அவர் கூறியுள்ளார்.

இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த கொள்வனவின்போது, 48 சுருள்கள் கொண்ட ஒரு பெட்டி என்பதற்கு பதிலாக 48 பெட்டிகள் என்று தவறுதலாக பதிவாகியதால் இவ்வாறு பெருந்தொகையான டாய்லெட் பேப்பர் பெட்டிகள் கடந்த பெப்ரவரி மாதம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

தற்போது நாடு முழுவதிலும் டாய்லெட் பேப்பருக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினை பார்க்கும்போது, அளவுக்கதிகமான பெறுமதிமிக்க பொருள் தனது வீட்டிலிருப்பதாக தான் உணர்தாகவும் இதனை பாதுகாப்பதற்கு காப்புறுதி செய்யலாமா என்று யோசிப்பதாகவும் நகைச்சுவையாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்.

தவறுதலாக விநியோகிக்கப்பட்ட இந்த 2304 toilet பேப்பர் சுருள்களுக்கும் 3264 டொலர்களை கனட்டையில் அறவிட்டபோதுதான் தவறை உணர்ந்துகொண்டதாகவும் 68 டொலருக்கு வாங்கவேண்டிய டாய்லெட் பேப்ப ருக்கு பதிலாக 3264 டொலர்களை தான் செலவுசெய்திருந்தாலும் இப்போது அதன் மதிப்பு புரிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த டொய்லெட் பேப்பர் சுருள்களை இணையத்தில் அவர் விற்பனை செய்துவருகிறார்.